April 11, 2022 தண்டோரா குழு
பிட்ச் பர்னர்ஸ் கிரிக்கெட் க்ளப் சார்பாக, தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெற்ற தொடர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை துடியலூர் அடுத்த வட்டமலை பாளையம் பகுதியில் உள்ள தனியார், கல்லூரியில், இளம் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில்,பிட்ச் பர்னர்ஸ் கிரிக்கெட் க்ளப் சார்பாக கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த மாதம் 26 ஆம் தேதி துவங்கியது.தொடர்ந்து நான்காவது ஆண்டாக, நடைபெறும் இதில்,கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள, பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார்,32 அணிகள் கலந்து கொண்டன.
ஒவ்வொரு அணியினருக்கும் 10 ஓவர்கள் வீதமாக, நாள் ஒன்றுக்கு 6 போட்டிகள், நடைபெற்று இறுதி போட்டியில் ஏ.பி.டி மற்றும்,எஸ்.கே.பி டைடல் சர்ஜ் அணியினர் விளையாடினர்,முதலில் பேட் செய்த ஏபிடி அணியினர்,10 ஓவர்களில் 103 ரன்களை எடுத்தனர்.
104 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த எஸ்கேபி டைடல் சர்ஜ் அணியினர் 87 ரன் மட்டும் பெற்று தோல்வியடைந்தனர்.இந்நிலையில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.பிட்ச் பர்னர்ஸ் கிரிக்கெட் க்ளப் அணியின் நிர்வாகிகள் சார்லஸ், குருபிரசாத், கோகுல், தலைமையில் நடைபெற்ற விழாவில்,,சிறப்பு அழைப்பாளர்களாக, நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா செந்தில் குமார், மக்கள் நீதி மய்யம், கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் பிரபு,5 கே கார், நிறுவன மேலாளர்,ரஞ்சித், ஆகியோர் கலந்து கொண்டு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர்.
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட வீல் சேர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் க்ளப் அணியினர், சக்கர நாற்காலியில் அமர்ந்து படி கிரிக்கெட் மட்டையை சுழற்றி அடித்தும் வீல் சேரில் ஓடியும் ரன் எடுத்தனர்… விளையாடுவதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்று, விளையாடிய மாற்று திறனாளிகளான, தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் க்ளப் அனியினரை ஊக்கபடுத்தும் வகையில், மூன்று கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய, ஏபிடி அணியை சேர்ந்த பிரகதிஷ் என்பவருக்கு சிறப்பு கோப்பையும், வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.