April 24, 2017 தண்டோரா குழு
இங்கிலாந்தில் பியானோ(இசை கருவி) ஒன்றில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த 913 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு இந்தியா ரூபாய் படி 4 கோடி ஆகும்.
2௦16-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்திலுள்ள ஸ்ரோப்சியர் என்னும் இடத்தில் வசிக்கும் ஹெம்மிங் என்பவர் பியானோ ஒன்றை வாங்கியுள்ளார். அதை பழுதுபார்க்கும்போது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.உடனே அவர் லண்டன் அருங்காட்சியக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த அவர்கள் உடனே அவருடைய இல்லத்திற்கு வந்து, அந்த தங்க நாணயங்களை சோதனை செய்தனர்.
மகாராணி விக்டோரியா, 7-வது எட்வர்ட் மற்றும் 5வது ஜார்ஜ் ஆகியோர் 1847 முதல் 1915-ம் ஆண்டு வரை இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்த காலத்தை சேர்ந்த தங்க நாணயங்கள் என்று அந்த சோதனையின் முடிவில் தெரிய வந்தது.அந்த பியானோவில் மொத்தம் 913 நாணயங்கள் இருந்தன என்று அதிகாரிகள் உறுதி செய்தனர். அந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 5௦௦௦௦௦ பவுண்ட், அதாவது இந்திய செலவாணி படி சுமார் 4 கோடி ஆகும்.