• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரசவத்தில் ஒரே நேரத்தில் குழந்தை பெற்ற தாய் – மகள் !

September 30, 2017 தண்டோரா குழு

சிரியா நாட்டை சேர்ந்த தாயும் மகளுக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சிரியா நாட்டை சேர்ந்த பாத்திமா பிரின்சி என்னும் 41 வயது தாயும் அவருடைய மகள் கேட் பிரின்சி என்னும் 21 வயது மகளும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சிரியா நாட்டை விட்டு வெளியேறி துருக்கி நாட்டில் தஞ்சம் புகுந்தனர். அப்போது இருவரம் கர்ப்பமாய் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் இருவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் ஒரே நேரத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் தங்கள் மகன்களுக்கு துருக்கி நாட்டின் தற்போதைய குடியரசு தலைவர் ரெசெப் தய்யிப் எர்டோகன் பெயரின் முதல் இரண்டு பெயரை
சூட்டியுள்ளனர்.

இது குறித்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எர்கான் அடாஸ் கூறுகையில்,

“சிரியாவின் உள்நாட்டு போரின் காரணமாக அங்கிருந்து தப்பி இங்கு வந்த அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். தாயுக்கும் மகளுக்கும் ஒரு நேரத்தில் குழந்தை பிறந்த சம்பவம் இங்கு நடந்தது இல்லை” என்று கூறினார்.

மகப்பேறு மருத்துவர் நயீம் உன்சல் கூறுகையில்,

“அந்த இரண்டு குழந்தைகளின் பிறப்பு ஒரு அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். பாத்திமா மற்றும் அவருடைய மகளின் கணவர்கள் எங்கு இருக்கின்றனர் என்றோ குழந்தைகள் பிறப்பை பார்த்தனரோ என்று தெரியவில்லை” என்று கூறினார்.

மேலும் படிக்க