September 29, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் காரமடையில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பிரச்சார வாகனம் வாயிலாக சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பிரச்சார வாகன துவக்க நிகழ்வில், மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் வெங்கடேஷன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
வேளாண்மை துறை சார்பில் சிறுதானியங்கள் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் முக்கியத்துவம் குறித்து வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரச்சார வாகனம் வாயிலாக காரமடையில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாறிவரும் பருவ சூழ்நிலையில், மழை பற்றாங்குறையில் விவசாயிகள் குறைந்த அளவில் நீர் தேவைப்படும் சிறுதானியங்களை பயிர் செய்ய வலியுறுத்தப்பட்டது.
மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், கிராம வேளாண்மை வளர்ச்சி குழு அமைக்கப்பட்டு, குழுவிலுள்ள விவசாயிகளுக்கு கோடை உழவு, பூச்சி நோய் தாக்குதல் தொடர்பான மேலாண்மை பயிற்சி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.