April 10, 2017
தண்டோரா குழு
மரத்தாலான இரு சக்கர வாகனத்தை தயாரித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசலித்து உள்ளார் பிரபல கைவினை கலைஞர்.
பிரபல கைவினை கலைஞர் புத்தசேன் விஷ்வகர்மா, தன்னுடைய 12 வயது மகளின் ஆசைப்படி மரத்தாலான இருசக்கர வாகனத்தை தயார் செய்துள்ளார்.அப்படி தயார் செய்த வாகனத்தை முழு பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்ட பின் பிரதமருக்கு அவர் பரிசாக அளித்துள்ளார்.
இவர் இதற்கு முன் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் போன்ற பிரபலங்களுக்கு பரிசளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது