June 16, 2017
தண்டோரா குழு
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக போர்ச்சுகல், நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விஜய் பக்லே கோரி கூறுகையில்,
பிரதமர் நரேந்திர மோடி வரும் 24ம் தேதி முதல் அரசு முறைப் பயணமாக போர்ச்சுகல், செல்கிறார்.இதனைத் தொடர்ந்து 25 மற்றும் 26ம் தேதி அமெரிக்கா செல்கிறார். மேலும் 27ம் தேதி நெதர்லாந்து சென்று அங்கு அந்நாட்டு அரசரை பிரதமர் சந்திக்க உள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டுக்கு முதன்முதலாக பிரதமர் மோடி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.