July 21, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைகலைஞர் பென்னிங்டன் தனது இல்லத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பாலோஸ் வெர்டஸ் என்னும் இடத்தில், பிரபல இசைக்கலைஞர் செஸ்டர் பென்னிங்டன்(41) வசித்து வருகிறார். அவர் தனது இல்லத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இவர் லின்கின் பார்க் என்ற இசைக்குழுவின் முன்னணி பாடகர் ஆவார்.
அமெரிக்காவில் வருகின்ற ஜூலை 27ம் தேதி, மான்ஸ்பீல்ட் என்னும் இடத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் செஸ்டர் தற்கொலை செய்துக்கொண்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் டேட்ரோய்ட் நகரில், அமெரிக்காவின் சவுண்ட்கார்டன் என்னும் மற்றொரு இசை குழுவின் முன்னணி பாடகர் கிரீஸ் கார்நெல் தற்கொலை செய்து கொண்டார். கிரீஸ் கார்நெல்லின் மற்றும் செஸ்டர் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
செஸ்டர் இறந்த நாள் அவருடைய நெருங்கிய நண்பர் கிரீஸ் கார்நெல்லின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்நெல்லின் மறைவை குறித்து செஸ்டர் ஒரு உருக்கமான செய்தியை சமூக வலைதளத்தில் தனது இறப்பிற்கு முன் வெளியிட்டுள்ளார்.
“உன்னுடனும் உன் குடும்பத்தினருடனும் நான் பகிர்ந்துக்கொண்ட சிறப்பு தருணங்களை நினைக்கிறேன். உன் மறைவின் துக்கத்தால் இன்னும் அழுதுக்கொண்டு இருக்கிறேன்” என்று அந்த செய்தியில் வெளியிட்டிருந்தார்.