July 15, 2022
தண்டோரா குழு
நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக் குறைவால் காலமானார்.
1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த பிரதாப் போத்தன் 1978 ஆம் ஆண்டு இயக்குனர் பரதனின் ஆரவம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 1979 ஆம் ஆண்டு அழியாத கோலங்கள் படத்தில் அறிமுகமான அவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
தமிழில் மைடியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கி உள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி மொழிகளில் 100 படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் காலமானார்.அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது