September 13, 2017 தண்டோரா குழு
பிரபல வாட்ஸ் அப் நிறுவனத்தின் துணை நிறுவனர் பிரையன் ஆக்டன், அந்நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2௦௦9ம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனத்தை, ஜான் கூம் என்பவருடன் சேர்ந்த பிரையன் ஆக்டன் தொடங்கினார். ஜன் கூம் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும், பிரையன் ஆக்டன் அதன் துணை அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், தான் சொந்தமாக வேறு ஒரு நிறுவனத்தை தொடங்க இருப்பதால், வாட்ஸ் அப் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக பிரையன் ஆக்டன் சமீபத்தில் தனது பேஸ்புக் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“லாப நோக்கமற்ற தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு கொண்ட ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். நான் எண்ணியிருந்த கனவை நனவாக்கும் நேரம் இது. என்னுடைய புதிய முயற்சிகளை குறித்து, விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்வேன்” என்று தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்டார்.