• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரமல் லாக்டோ கேலமைன் பிராண்ட் தூதராகபிரியங்கா மோகன் ஒப்பந்தம்

April 28, 2022 தண்டோரா குழு

பிரமல் பார்மா லிமிடெட்டின் நுகர்வோர் தயாரிப்புகள் பிரிவு, அதன் முதன்மை சரும பராமரிப்பு பிராண்டான லாக்டோ கேலமைன்க்காக, தென்னிந்திய திரைப்பட நட்சத்திரம் பிரியங்கா மோகனுடன், இணைந்திருப்பதாக அறிவித்தது.

தென்னிந்தியாவில், சார்கோல் பீல் ஆஃப் மாஸ்க், சன் ஸ்கிரீன், ஃபேஸ்வாஷ் வித் கயோலின் க்லே மற்றும் ஆயில் கண்ட்ரோல் ஃபேஸ் வைப்ஸ் போன்றவற்றை உள்ளடக்கிய எண்ணெய் சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை பிராண்ட் விரிவுபடுத்துகிறது. ‘கிளியர் மேட் பேலன்ஸ்டு ஃபேஸ்’ என்ற புதிய பிராண்ட் பிரச்சாரத்தின் மூலம், லாக்டோ கேலமைன், நுகர்வோரின் எண்ணெய் சரும பிரச்சனைகளை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முகத்தில் அதிகப்படியான எண்ணெய் காரணமாக, சில நேரங்களில் பருக்கள், கரும்புள்ளிகளின் சீரற்ற தன்மை போன்றவற்றால் குறுக்கிடப்படுகிறது, சரியான தெளிவான சருமத்தை நுகர்வோர் தொடர்ந்து விரும்பி வருவதால், இந்தியாவில், சரும பராமரிப்புப் பிரிவு ஏற்றம் கண்டுள்ளது. லாக்டோ கேலமைன் அதன் புதிய தயாரிப்புகளின் மூலம் எண்ணெய் சரும பிரச்சனைகளை சமாளிக்க உறுதியளிக்கிறது, மேலும் தினசரி எண்ணெய் இல்லாத, மேட் ஆக தோற்றமளிக்கும் சருமத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகைகளில் சிறந்த தயாரிப்புகளை வழங்குகிறது.

லாக்டோ கேலமைன் கயோலின் க்லே ஒரு பயனுள்ள தீர்வாகும், இது தினமும் பயன்படுத்தப்படும்போது, அதிகப்படியான எண்ணெயைத் தடுக்கிறது மற்றும் தெளிவான மேட் சரும இலக்குகளை அடைய உதவுகிறது.

ஒரு பாரம்பரிய பிராண்ட் ஆன, லாக்டோ கேலமைன், அதன் முக லோஷனுக்கு பிரபலமானது, மில்லியன் கணக்கான வீடுகளில் ஊடுருவியுள்ளது. எண்ணெய்க் கட்டுப்பாட்டு லோஷன்கள், சன்ஸ்கிரீன், ஃபேஸ் வாஷ் மற்றும் ஃபேஷியல் துடைப்பான்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுடன், எண்ணெய் சருமத்திற்கான, சருமப் பராமரிப்பில் சந்தையில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது. 2023 நிதியாண்டில், தனது வர்த்தகத்தின் அளவை இரட்டிப்பாக்க, சரும பராமரிப்பு மற்றும் அழகுப் பிரிவில் முன்னெடுப்பிற்கு , பிராண்ட் திட்டமிட்டுள்ளது.

கன்சூமர் ப்ராடக்ட் டிவிசன்-னின் தலைமை நிர்வாக அதிகாரி நிதிஷ் பஜாஜ் கூறுகையில்,

“நவீன பெண்ணுக்கு, ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறை முக்கியமானது மற்றும் இது சரும பராமரிப்புக்கும் பொருந்தும் என்று நாங்கள் நம்புகிறோம். தோல் பராமரிப்பில் லாக்டோ கேலமைன் வரம்பை விரிவுபடுத்துவது, அழகுப் பிரிவில் எங்கள் பிராண்ட் இருப்பை வலுப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் எங்களின் உத்தியின் ஒரு பகுதியாகும். இது நுகர்வோரின் எண்ணெய் சரும பராமரிப்பு தேவைகளை நிவர்த்தி செய்து, அவர்கள் தெளிவான மற்றும் சமநிலையான சருமத்தை அடைய உதவுகிறது. தென்னிந்திய சந்தையில் எங்கள் தயாரிப்பு வரிசைகளை விரிவுபடுத்தும்போது பிரியங்கா மோகனுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

செல்வி மோகன் தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க சில பணிகளைச் செய்துள்ளார், மேலும் திரையில் கவரும் ஆளுமையைக் கொண்டுள்ளார், இது எங்கள் பிராண்டின் இலக்கு பார்வையாளர்களை அடைய அவரை மிகவும் சிறந்த பொருத்தமாக ஆக்குகிறது.” என்றார்.

லாக்டோ கேலமைன் உடனான இந்த தொடர்பைப் பற்றி பிரியங்கா மோகன் பேசுகையில்,

“லாக்டோ கேலமைன் அதன் வளர்ச்சிப் பயணத்தில், அதன் சரும பராமரிப்பு தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பெண்கள் எண்ணெய் பசை சருமம் தொடர்பான பிரச்சனைகள் உட்பட எண்ணற்ற சமாளிக்கவேண்டிய சரும பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

முதன்மையாக, பெண்கள் எதிர்கொள்ளும் சரும பராமரிப்பு பிரச்சனைகள் பற்றிய ஆழமான புரிதலுடன், லாக்டோ கேலமைன், அவர்களின் தெளிவான, மேட் சருமத்தை அடைய உதவும் ஒரு முழுமையான தீர்வை வழங்குகிறது. இந்தியப் பெண்கள் எப்படி அழகான மற்றும் சீரான தோற்றத்தை அடைய முடியும் என்பதை மறுவரையறை செய்யும் பிராண்டின் தொலைநோக்கை நான் பகிர்ந்து கொள்கிறேன்“ என்று கூறினார்.

மேலும் படிக்க