May 3, 2017 தண்டோரா குழு
ஹாலிவுட் நடிகர் மற்றும் முன்னாள் கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான லெஜியன் டி ஹானீயர் வழங்கப்பட்டது.
ஹாலிவுட் நடிகர் மற்றும் முன்னாள் கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக விழிப்புணர்வு நடத்தி வருகிறார். அவருடைய இந்த தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான லெஜியன் டி ஹானீயர் வழங்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள எலிசீ அரண்மனையில் நடந்த விழாவின்போது, பிரான்ஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிராங்கோயில் ஹாலண்டே, அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு இந்த விருதை வழங்கினார்.
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் தனது ட்விட்டரில்,
“என்னுடைய சுற்றுச்சூழல் பணிக்காக என்னை தளபதியாக நியமித்ததற்கு என் மனமார்ந்த நன்றி” என்று தனது பதிவில் தெரிவித்தார். தனக்கு கிடைத்த இந்த மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பதில் வெளியிட்டிருந்தார்.
1802ம் ஆண்டு நபோலியன் அரசரால் ‘லெடியான் டி ஹானீயர்’ நிறுவப்பட்டது. பிரான்ஸ் நாட்டிற்கு சிறந்த சேவை செய்த ராணுவத்தினர் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், என்பிசி செய்தி நிறுவனத்தின் சிறந்த செய்தி சேகரிப்பாளர் டாம் ப்ரோகா, தேசிய இரண்டாம் உலகப்போர் அருங்காட்சியகத்தின் இயக்குநர் நிக் முல்லர் ஆகியோருக்கு பிரான்ஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிராங்கோயில் ஹாலண்டே கடந்த மே மாதம் இந்த விருதை வழங்கினார்.
மேலும், சர்வதேச கலைஞர்கள் மற்றும் கலாச்சார துறையில் சிறந்தவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. ஹாலிவுட் நடிகர்களான கிளின்ட் ஈஸ்ட்வூட், ராபர்ட் ரெட்போர்ட்,சல்மா ஹாயெக்
அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர்களான டேனியல் ஸ்டீல் மட்டும் ஜெர்ரி லூயிஸ் ஆகியோருக்கும் இதற்கு முன்பாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.