April 18, 2016 தண்டோரா குழு
பொதுவாக உணவகங்களில் மூன்று சுற்று உணவுகளை வழங்குவது வழக்கம். ஆனால் பிரிட்டன் நாட்டில் புதிதாக சிறப்பு உணவகம் திறக்கப்பட்டு அதில் காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையே எடுத்துக் கொள்ளும் ப்ருன்ச் என்னும் உணவு பழக்கம் தற்போது உணவகங்களில் கொடுக்கப்படுகிறது.
மனிதர்கள் போல தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணியான நாய்களுக்கும், இவ்வகை ப்ருன்ச் உணவு தேவை என்று நினைத்தவர்களுக்கு, நாய்களுக்கு என பிரத்யேகமான, இவ்வகை உணவகங்கள் துவங்கப்பட்டுள்ளது.
பெடிக்ரீ நாய் பார்லர் பெட் பெவிலியன் என்னும் நிறுவனம் செல்சிய நகரத்தை சேர்ந்த ‘ப்ளூ பர்ட்’ உணவகத்துடன் சேர்ந்து பிட்ஸ் அண்ட் போன்ஸ் உணவகத்தை ஆரம்பித்துள்ளது.
நாய்க்குட்டிகளுக்கு முதலில் சசேஜுஸ் மற்றும் மாட்டிறைச்சி பழுப்பு அரிசியும் வழங்கப்படுகிறது. அடுத்ததாக, பிரதான உணவாக, ஜெர்மன் பிரட்உடன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி வழங்கப்படுகிறது. இறுதியில் சக்கர வள்ளி கிழங்கு மற்றும் முட்டை வெண்கரு கோதுமை சர்க்கரை முதலியன சேர்த்துச் செய்யப்படும் அப்பவகையில் ஜெலட்டின் நிரப்பி தரப்படும்.
மேலும், இந்த உணவு ஏற்பாடு ஏப்ரல் 27 முதல் மே 1 வரை நடைப்பெறும். இதன் மற்றொரு விசேசம் என்னவென்றால் நாய்களின் பீரான ஹூச் பூச் எனும் குளிர் பானத்துடன் டிஸ்கோ நடனமும் நடைப்பெறும்.
ஆடம்பரமான ப்ருன்ச் உணவை அந்த செல்லப்ரானிகள் அனுபவிக்கும் நேரத்தில், நாய்க்குட்டிகளின் உரிமையாளர்கள் தங்களுக்கான உணவை சாப்பிட தனிப்பட்ட உணவகமும் அங்கேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.