• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் – 12 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்

March 27, 2023 தண்டோரா குழு

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். 12 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் செரங்காடு 3&வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோபி (30).இவரது மனைவி சத்யா (28). சத்யா கர்ப்பம் தரித்து இருந்தார். நிறைமாத கர்ப்பிணியான சத்யாவுக்கு கடந்த 18-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது.இதனால் கோபி அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதற்கிடையே கடந்த 19-ம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று மாலை குழந்தையை காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா அந்த பகுதியில் இருந்த நர்சுகள் மற்றும் காவலாளிகளிடம் தனது குழந்தை கடத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது குழந்தையை ஒரு பெண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதன் பின்னர் அந்த பெண் குறித்து விசாரணை நடத்திய போது, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வாரத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக குழந்தையை கடத்தி செல்ல பெண் சுற்றி திரிந்துள்ளார். அவர் அந்த வார்டில் இருக்கும் பெண்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை சத்யாவின் உறவினர்களிடம் இருந்து குழந்தையை பெற்ற அந்த பெண் வார்ட்டுக்கு கொண்டு வருவதாக கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், குழந்தையை கண்டுபிடிக்க 5 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுபோல் குழந்தையை கடத்தி சென்ற பெண் குறித்த தகவல்களையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இதற்கிடையே நேற்று காலை திருப்பூர் இடுவாய் வாசுகிநகர் பகுதியில் பெண் ஒருவர் குழந்தையுடன் சந்தேகப்படும்படி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது அது குழந்தையை கடத்தி சென்ற பெண் என்பது உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்திய பெண் இடுவாய் வாசுகிநகரை சேர்ந்த முத்து சண்முகம் என்பவரது மனைவி பாண்டியம்மா (42) என்பது தெரியவந்தது.பாண்டியம்மாவை போலீசார் கைது செய்தனர்.மேலும், குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, கோபி, சத்யா தம்பதியிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையை மீட்டுக்கொண்டு போலீசார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த போது, அங்கிருந்தவர்கள் பலரும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இதற்கிடையே வழக்கு பதிவு செய்யப்பட்ட 12 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட தலைமை காவலர் சங்கரநாராயணன் மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் பாராட்டினார்.

மேலும் படிக்க