May 11, 2017 தண்டோராகுழு
பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பிளஸ் 2 முடிவுகள் இதுவரை முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது.முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது எனவும் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது எனவும் கூறினார்.
மேலும், சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண்கள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிலும் இதேமுறை கடைபிடிக்கப்படும் என கூறினார்.