June 8, 2022
கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:
கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து விட்டு மீண்டும் மஞ்சப்பைகளை பயன்படுத்திட தெரிவித்துள்ளோம். மேலும் கடைகளுக்கு திடீர் ஆய்விற்கு செல்லும் அனைத்து அலுவலர்களும் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து அவ்வாறு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் பிளாஸ்டிக் இல்லாத கோவையை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அதேபோல் வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என வீடுகளிலேயே பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கின்றனர். அதன் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை தனியே பிரித்து, அவற்றை இயந்திரங்களின் மூலம் சிறுதுகள்களாக மாற்றப்பட்டு சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், தார்சாலை அமைக்கும் பணிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் பேசினார்