December 31, 2016 தண்டோரா குழு
பிஹார் மாநிலத்தின் பக்ஸர் சிறைச்சாலையில் இருந்த ஐந்து கைதிகள் தப்பியோடினர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் தலைநகரான பட்னா அருகில் பக்ஸர் சிறைச்சாலை உள்ளது. அந்த சிறைச்சாலையில் இருந்து நான்கு ஆயுள்தண்டனை கைதிகளும் மற்றும் 1௦ ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுவரும் கைதியும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3௦) சிறைச்சாலையின் சுவரில் துளை போட்டு தப்பியுள்ளார்.
இது குறித்து பட்னா நகரின் மாவட்ட ஆட்சியர் ரமண்குமார், “இச்சம்பவம் நடுயிரவு 12 மணிமுதல் அதிகாலை 3 மணி அளவில் நடந்துள்ளது. இரும்பு கம்பி, குழாய் மற்றும் வேட்டிகள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றார்.
காவல்துறை கண்காணிப்பாளர் உபேந்திர சர்மா கூறுகையில், “தப்பியோடிய பிரஜித்சிங், சிர்காரி ராய், சோனுபாண்டே, உபேந்திர ஷா ஆகியோர் ஆயுள்தண்டனை கைதிகள் ஆவர். சோனு சிங் 1௦ ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். பாதுகாப்பு குறைபாடும் மூடு பனியும் அவர்கள் தப்புதற்கான சூழலை ஏற்படுத்தியிருருக்க கூடும். தப்பியோடிய கைதிகளைத் தேடும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்றார்.