• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்ஜி சுகாதார வளாக மைதானத்தில் நடைபெற்ற INTRAMURAL SPORTSMEET 2023-24

July 12, 2024 தண்டோரா குழு

பிஎஸ்ஜி நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகளின் அனைத்து வளர்ச்சியையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில்,பி.எஸ்ஜி சுகாதார வளாக மைதானத்தில் இன்று INTRAMURAL SPORTSMEET 2023-24T நடைபெற்றது.

தலைமை விருந்தினர் அம்மு நர்சிங் அதிகாரி,ஊழியர் மாநில காப்பீட்டு நிறுவன மருத்துவமனை மற்றும் பிஎஸ்ஜி நர்சிங் கல்லூரி முன்னாள் மாணவி (2013 batch) தேசிய கொடியையும் அதன் பிறகு பேராசிரியர் மீரா சரவணன் பிஎஸ்ஜி கல்லூரி முதன்மை பொறுப்பாளர் கல்லூரி கொடியையும் ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து தலைமை விருந்தினர் மாணவர்கள் அணிவகுப்பை தொடங்கி வைத்தார்.விளையாட்டு ஜோதியை ஏற்றி மாணவர்களிடம் ஒப்படைத்தார்.மாணவர்கள் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பி எஸ் ஜி நர்சிங் கல்லூரி முதன்மை பொறுப்பாளர் பேராசிரியர் மீரா சரவணன் உரையை வழங்கினார்.சோபியா பிரின்சஸ் ஹேமா பேராசிரியர் மற்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர், வரவேற்புரையாற்றினார்.

அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவரது உரையில் உடற்பயிற்சி எவ்வாறு மனதையும் உடலையும் ஒருங்கிணைக்கிறது மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும்,நேர மேலாண்மை மற்றும் விளையாட்டில் எப்படி சாதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும் பாட திட்டம் மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் முக்கியத்துவத்திளையும் அதனுடன் பெற்றோர்களின் உழைப்பிற்கு மதிப்பு தந்து நன்றாக கல்வியை பயில வேண்டும் என்றும் மாணவர்களுக்கு வலியுறுத்தி விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்.

குழு நிகழ்வுகள் தடகள விளையாட்டு நிகழ்வுகள் மாணவர்களுக்கு உடற்கல்வி இயக்குனர் பழனிசாமி மற்றும் அவரது குழிவினரால் நடத்தப்பட்டது ஆண்களுக்கான தனிநபர் சாம்பியன்ஷிப் கோப்பையை செல்வன் லோகேஷ் குமார் பெற்றார். பெண்களுக்கான தனிநபர் சாம்பியன்ஷிப் கோப்பையை ஸ்வேதா பெற்றார். ஒட்டுமொத்த கோப்பையை White Hawks அணி பெற்றது.வெற்றியாளர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.ஆண்டு அறிக்கையை விளையாட்டு செயலாளர் ஈஷா லட்சுமி வாசித்தார்.ஜெஸிகா மேரி, ஆசிரியர் மற்றும் விளையாட்டுத் துணை ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை ஆற்றினார்.

மேலும் படிக்க