February 27, 2025
தண்டோரா குழு
கோவை, பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழகுத் துறை இணைந்து இவான்ஸா 25 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி தலைமை தாங்கினார்..இதில் சிறப்பு விருந்தினராக கிராசிம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் முருகன் தேன்கொண்டார் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், ஆடை வடிவமைப்பு துறையை சேர்ந்த மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு அணிவிக்கப்பட்டு ஆடை அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள், மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் யசோதா தேவி, இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை டீன் சாந்தி ராதாகிருஷ்ணன்,துறை தலைவர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.