• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணாம்மாள் கல்லூரியில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பயிலரங்கம்

September 28, 2022 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணாம்மாள் மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பயிலரங்கம் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

தேசிய வாழ்க்கை அறிவியல் தொழில் முனைவோர் விழிப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக பைராக் பிராந்திய தொழில் முனைவோர் மையம், பைராக் இ யுவா மையம்,
பெங்களூரு தாவரவியல் துறை செல்லுலார் மற்றும் மூலக்கூறுகளுக்கான மையம் இணைந்து அனுபவமிக்க தொழில்துறை வல்லுநர்களைக் கொண்டு தொழில் முனைவோர்களை உருவாக்க பயிலரங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இப்பயிலரங்கத்தின் முக்கிய நோக்கமாக, தொழில் முனைவோர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடுவதன் மூலம் அவர்களின் எண்ணங்களில் தொழில் முனைவோருக்கான விருப்பத்தை ஏற்படுத்தி அவற்றை ஊக்குவிப்பதாகும்.பைராக் இயுவா நுண்ணுயிரியல் மற்றும் தொழில்துறை நுண்ணுயிரியலில் சிறப்பு கவனம் செலுத்தி தொழில் தொடக்க மையங்களை உருவாக்குகிறது. இந்த மையம் முக்கியமாக கழிவு மதிப்பாய்வு, உணவு தொழில்நுட்பம், சுகாதார பாதுகாப்பு, என்சைமாளஜி மற்றும் பயோபிலாஸ்டிக் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.

இம்மையத்துடன் அறிவுசார் பங்காளரான சென்னையில் உள்ள பெண்கள் அமைப்பான ஜுப்பிலி பயோடெக் பார்க் இணைந்து தேவையான ஆதரவையும் முழுமையான வழிக்காட்டுதலையும் வழங்குகிறது. இ யுவா மையம் ஆய்விற்கான மானியம் மற்றும் ஆலோசனை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு அளித்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற ஊக்குவிக்கிறது.

நிகழ்ச்சியில் தன்வந்திரி பயோ மெடிக்கல் நிறுவனத்தின் நிறுவனர் சுருதி, சி கேம்ப் மையத்தின் அதிகாரி அதிதீ லேலே, பைராக் மையத்தின் பாவிஷா வாலா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் யசோதா தேவி, முதல்வர் மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க