November 18, 2022 தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கலை அறிவியல் கல்லூரியில் உள்ள சங்கமம் அரங்கில் நடைபெற்றது.
மருத்துவமனை நிர்வாகத்துறை மாணவன் சாமுவேல் ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார். பி.எஸ். ஜி கல்லூரி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை உரையாற்றினார். தொடர்ந்து பி.எஸ். ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், கல்லூரி முதல்வர் பிருந்தா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் படி, மருத்துவமனை நிர்வாக துறை முதுகலை படிப்பு பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயிற்று விக்கப்பட்டு வருகிறது.இந்த படிப்பில் மூன்று நாட்கள் கல்லூரியிலும்,மூன்று நாட்கள் மருத்துவமனையில் பாடங்களும் நடைபெறும். இது மாணவர்கள் படிக்கும் பொழுது நிர்வாக திறமையை பெறுவதற்கு வழி வகுக்கும். பி.எஸ்.ஜி கல்லூரி துணை முதல்வர் அங்குராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
மாணவர்கள் நேரடியான அனுபவத்தை பெறுவதால் படித்து முடித்த உடனே வேலை வாய்ப்புகள் ஏராளமாக கிடைக்கின்றன என பி.எஸ்.ஜி மருத்துவமனை டாக்டர் புவனேஸ்வரன் தெரிவித்தார். பி எஸ் ஜி ஹெல்த் கேர் இயக்குனர் பானுமதி வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் கல்லூரி மாணவி நந்தினி நன்றியுரை கூறினர்.