August 10, 2022
தண்டோரா குழு
சுதந்திர இந்தியாவுடன் 1947 முதல் பயணித்து வரும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பவள விழாக்களை கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை அஞ்சல் தலை ஒன்று வெளியிடப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர்
முனைவர் பிருந்தா வரவேற்புரை ஆற்றுகிறார். நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை ஏற்கிறார். அத்வைத் அகாடமி நிறுவனர் ரவி சாம் சிறப்புரை ஆற்றுகிறார். அஞ்சலக மேல்நிலை சீனியர் கண்காணிப்பாளர் கோபாலன் அஞ்சல் தலையை வெளியிடுகிறார்.
பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் கண்ணையன் நன்றியுரை ஆற்ற உள்ளார்.
இவ்விழாவில் இளங்கலை, முதுநிலை ஆய்வு படிப்பு என 14,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.