July 21, 2024 தண்டோரா குழு
பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சைத் துறையின் நான்காவது கருத்தரங்கம் ஜூலை 18 முதல் 24 வரையிலான தேதிகளில் நடைபெற்றது.
இதில் வெவ்வேறு விதமான உடல் பருமன் அறுவை சிகிச்சைகள் பற்றியும், பலதரப்பட்ட குழு மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் தொடர்பாக ஜூலை 19 மற்றும் 20, 2024 ஆகிய தேதிகளில் பி எஸ் ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விலங்கு ஆய்வகத்தில் பல வகையான உடல் பருமன் அறுவை சிகிச்சை முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.நாட்டின் பல்வேறு பகுதியைச் சார்ந்த உடல் பருமன் மாற்று வளர்ச்சிதை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களான மருத்துவர்.ரமன் கோயல், மருத்துவர்.பாலஷண்முகம், மருத்துவர். சரவண குமார், மருத்துவர். பாலமுருகன், மருத்துவர். பாலு, மருத்துவர். கார்த்திகேயன்,ஆகியோர் நேரடி பயிற்சி அளித்தனர்.
இதன் ஒரு பாகமாக,மயக்கவியல் நிபுணர்களுக்கான பல்வேறு பயிற்சிகளை பி.எஸ்.ஜி மயக்கவியல் துறையின் நிபுணர்களான மருத்துவர்.பிரஷாந்த் மற்றும் மருத்துவர் அருண் குமார் வழங்கினர். செவிலியர்களுக்கான சிறப்பு பயிற்சியினை பி.எஸ்.ஜி மருத்துவமனையின் செவிலியர் துறைத் தலைவர் பேராசிரியர். அனுராதா மற்றும் அறுவை சிகிச்சை துறை செவிலியர்கள் அளித்தனர்.
மேலும் 18 முதல் 24 வரையிலான உடல் பருமனால் ஏற்படும் பின் விளைவுகள், அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பின் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்,அறுவை சிகிச்சைக்கு பிந்தைய புறமறுவாழ்வு மற்றும் உளவியல் மேலாண்மை பற்றிய நிகழ்வினை பி.எஸ்.ஜி மருத்துவமனையின் முதன்மை உணவியல் ஆலோசகர் கவிதா முன்னிலையில் மருத்துவர்.ரிச்சா ஜேஸ்வால்,உணவியல் நிபுணர் AIIMS, டெல்லி அவர்களும்,பரிமளா தேவி, நிறுவனர் ,Parims Nutrition,கோவை அவர்களும்,மருத்துவர்.மதுகோயல், உடல் பருமன் மற்றும் வளர்சிதை மருத்துவர், மும்பை அவர்களும் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமையின் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள்,அறுவை சிகிச்சை மருத்துவர்கள்,மயக்கவியல் மருத்துவர்கள்,செவிலியர்கள்,ஊட்டச்சத்து நிபுணர்கள்,கல்லூரி மாணவ மாணவியர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.