March 8, 2023 தண்டோரா குழு
மார்ச் 8 2023 அன்று சர்வதேச மகளிர் தினம், தமிழ்நாடு மாநிலக் கிளை, பயிற்சி பெற்ற செவிலியர் சங்கமும், கோயம்புத்தூரில் உள்ள PSG செவிலியர்கல்லூரியும் இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் DigitALL:“Innovation and technology for gender equality”..ஸ்லோகன் எழுதுதல், டூடுல் கலை, சிறப்பு பட்டிமன்றம்மற்றும் குறும்படத் தயாரித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்லோகன் எழுதுவதில் 94 மாணவர்களும், டூடுல் கலையில் 78 மாணவர்களும், குறும்படத் தயாரிப்பில் 28 மாணவர்களும், விவாதத்தில் 111 மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சென்னை, வேலூர், ஈரோடு, சேலம், காஞ்சிபுரம்,திண்டுக்கல், திருச்சி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை,திருவண்ணாமலை, திருச்சந்தூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 77 செவிலியர் கல்லூரிகள் பங்கு பெற்றன. பல்வேறு செவிலியர் கல்லூரியின் முதல்வர்களும் கலந்து கொண்டனர். தமிழ் தாய் வாழ்த்து மற்றும் குத்து விளக்கு ஏற்றுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
PSG செவிலியர் கல்லூரியின் முதல்வர் Dr. A. ஜெயசுதா, கூட்டத்தை வரவேற்று, பெண்கள் அதிகாரம் பற்றிய மதிப்புமிக்க உரையை நிகழ்த்தினார்.கல்வி ஒவ்வொருவரையும் மாற்றும் என்றும், ஒவ்வொரு நபரும்தனித்துவமானவர்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாய்ப்பு என்று முதல்வர் எடுத்துரைத்தார்.
மேலும், டாக்டர் அனி கிரேஸ் கலைமதி செவிலியர் பயிற்சியாளர் படிப்பை இந்தியாவில் கொண்டு வருவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியை பற்றியும் எடுத்துரைத்தார். தலைமை விருந்தினராக, இந்திய தென் மண்டல கிளை, பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜெனி கெம்ப் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அவர், பெண்கள் அழகானவர்கள் மற்றும் கடவுளின் வலிமையான படைப்பாளிகள் என்றும், ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்கள் என்றும் பெண்களின்முக்கியத்துவத்தைபற்றிஎடுத்துரைத்தார்.
பெண்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே வாழ்வின் சவால்களை சமாளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இறுதி விவாதம் 08.03.2023 அன்று சர்வதேச மகளிர் தினத்தின் போது “நவீன உலகில் தொழிலில்நுட்ப வாழ்வு அவசியமானதா? ஆபத்தானதா? என்ற தலைப்பில் இறுதி பட்டிமன்றம் நடைபெற்றது.நடுவர் பேராசிரியர் வசந்தி பாய் மற்றும் 6 சிறந்த பேச்சாளர்கள் (செல்வி. M.அபிராமி, M. அஞ்சலி, செல்வி S.ஸ்வர்ணமுகி G.A. சிமி ப்ரீத்தி,செல்வி M.வைஷாலி. மற்றும் செல்வி J. பவதாரணி) ஆகியோர் கலந்து கொண்டு விவாதம் செய்தனர்.
அவர்கள் நவீனதொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் தீமைகளையும் எடுத்துரைத்தனர். தகவல் தொழில்நுட்பம் என்பது உணவு, தண்ணீர், தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைபோல் இன்றுஅவசியமானது என்று சில விவாதக்காரர்கள் கூறினர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சிலதீமைகள் இருந்தாலும், இன்றைய தொழில்நுட்பத்தை நம்மால் தவிர்க்க முடியாது.IT மேம்பாடு தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அது சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவசியம் என்றும் நடுவர்தீர்ப்புவழங்கினார். ஒவ்வொரு பங்கேற்பாளர்களும் தங்கள் உற்சாகமான பங்கேற்பிற்காக ஒரு Momento மற்றும் சான்றிதழையும் பெற்றனர்.
ஸ்லோகன் எழுதுவதில், ஈரோடு வேளாளர் செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த ஜியா ஜோசப் 1ம் பரிசையும், 2வது பரிசை சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அதில்சர்ஹான்,சர்தார் ராஜாஸ் கல்லூரியைச் சேர்ந்த குழந்தை யேசு.M. செவிலியர், திருநெல்வேலி மற்றும் 3வது பரிசை வேலூர் CMCசெவிலியர் கல்லூரியைச் சேர்ந்த அக்சா ஜோஸ் மற்றும் காஞ்சிபுரம் ராஜலட்சுமி செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த அஷ்வினி.A.வென்றனர்.
குறும்படம் தயாரிப்பில், கோயம்புத்தூர் பிபிஜி செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த கார்த்திகா மற்றும் ராஜராஜேஸ்வரி முதல் பரிசு பெற்றார்கள். 2வது பரிசை திருவாலூர் இந்திரா செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த R.கௌதம் வென்றார். 3வது பரிசை திருச்சியை சேர்ந்த அன்பு நர்ஸின் கல்லூரி மாணவர்கள் R.சரவணகுமார்மற்றும் அதிபன் வென்றனர்.
டூடுல் கலையில், கோவை யுனைடெட் செவிலியர் கல்லூரியில் செல்வி. அனுஸ்ரீ முதல் பரிசு பெற்றார். தூத்துக்குடி செயின்ட் ஆன்ஸ் செவிலியர் பள்ளியைச் சேர்ந்த செல்வி.மனோ சித்ரா தேவிமற்றும் திருநெல்வேலி இதய ஜோதி செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த M.சத்தியமாலா மற்றும் கரூர் ஸ்ரீ அரவிந்தோ செவிலியர் கல்லூரி மாணவி சபித்தரா ஆகியமூவரும்2ஆம் பரிசையும், கோவை மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பிரியா.K.3ம் பரிசைவென்றனர்.