September 26, 2022 தண்டோரா குழு
கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வர் பிரகாசன் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பாலக்காடு ஐ.ஐ.டி இயக்குனர் சுனில்குமார் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் அவர் பேசிகையில்,
பட்டம் பெற்ற உடன் உங்கள் கற்றல் நின்று விடவில்லை என்றும், அது வாழ்க்கை முழுவதும் தொடரும். தற்போது நீங்கள் கற்பதற்கான அனைத்து வடிவிலான புத்தக தொகுப்புகளும் எல்லா வடிவிலும் உங்களுக்கு கிடைக்கின்றன. ஆனால் முன்பு அப்படி இல்லை, எளிதாக தரவுகள் கிடைத்து விடாது.இப்பொழுது எல்லா வகையான தரவுகளும் உங்களுக்கு எளிதில் கிடைத்து விடுகின்றன.அதனால் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று தனது கருத்தினை தெரிவித்தார்.
ஒரு விசயத்தை உறுதியாக நம்பினால் அதை செய்யுங்கள்.ஆனால் அதில் ஏதேனும் தயக்கம் இருந்தால் அதை செய்ய முயலாதீர்கள் . நீங்கள் விரும்பிய செயலை செய்யுங்கள்.செய்யும் வேலையையும் பிடித்து செய்யுங்கள். கடின உழைப்பை கைவிடாதீர்கள் என எடுத்துரைத்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் இளங்கலை , முதுகலையைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 348 பேர் பட்டங்களை பெற்றனர் .