September 15, 2023 தண்டோரா குழு
பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவன தினம் வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் தலைமை விருந்தினராக கே.தேன்மொழி,திட்ட இயக்குநர்,U R Rao செயற்கை கோள் மையம்,( URSC ) , இந்திய விண்வெணி ஆராய்ச்சி நிறுவனம் ( இஸ்ரோ ) பெங்களுரு கலந்து கொண்டார்.ட.கோபாலகிருஷ்ணன் பி.எஸ் . ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், டாக்டர் B,கிரிராஜ்,பி.எஸ். ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் புகழ் பெற்ற முன்னாள் மாணவர்கள் விருது பெற்றவர்கள் பி.எஸ்.ஜி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றுன் கல்லூரியின் மூத்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் தமிழ்நாட்டின் முதல் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி 84 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தின் ஆரம்ப ஆண்டுகளில் நிறுவப்பட்டதற்கான அடித்தள நாள் இந்நாளில் நடைபெற்ற விழாவில் இந்நிறுவனத்தின் புகழ் பெற்ற முன்னாள் மாணவர்கள் நால்வர் கௌரவிக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் சமூக வளர்ச்சியின் தூண்களாக கருதப்படுகின்றனர். மேலும் தகவல் தொழல் நுட்பம்,அறிவியல் துறைகளில் தங்கள் ஆராய்ச்சிகளின் மூலம் கல்வி திறனின் துணை கொண்டு சாதனை புரிந்தனர்.பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.கிரிராஜ் அவர்களின் வரவேற்பு உரையுடன் விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ட கோபாலகிருஷ்ணன உரை நிகழ்த்தினார் .
முன்னாள் மாணவர்களான பி . சிவலிங்கம் தெற்கு ரயில்வே கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் , லெப்டினன்ட் கர்னல் ஆர். செந்தில் குமார் கர்நாடகா மற்றும் கோவா என்சிசி – கூடுதல் இயக்குநர் நிர்வாக இயக்குநர் லலிதா ராவ் சாஹிப் ஸ்ரீ நியூட்ரிகேர் டெக்னாலஜிஸ் மற்றும் எஸ் விஸ்வநாதன் ஐ ஏ எஸ் , துணைத் தலைவர் சென்னை , துறைமுக ஆணையம் துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம் மேற்கண்ட முன்னாள் மாணவர்கள் தலைமை விருந்தினர் மற்றும் நிர்வாக அறங்காவலரால் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட கே . தேன்மொழி செல்வி முத்தான பல கருத்துக்களை பகிர்ந்தோடு கடந்த 94 வருடங்களாக தாய்நாட்டிற்கு சேவையாற்றும் பி.எஸ் . ஜி & சன்ஸ் அறக்கட்டளைக்கும் விருது பெற்ற முன்னாள் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் , விருந்தினர்கள் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் உட்பட சுமார் 1800 பேர் கலந்து கொண்டனர்.