April 17, 2024 தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில், , ஸ்டூடண்ட் ப்ராஜெக்ட் எக்ஸ்போ எனும் தலைப்பில் கண்காட்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் திறன்மிகு கண்டுபிடிப்புகள் காட்சிபடுத்தப்பட்டது.
நிகழ்ச்சியை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் கே. பிரகாசன் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல்,ஃபவுண்டரி, மெக்கட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் மற்றும் அபேரல் தொழில்நுட்பம் துறை சார்ந்த 110 ப்ராஜெக்ட்கள் காட்சிபடுத்தப்பட்டது.
பி.எஸ்.ஜி பாலிடெக்னிக்கல்லூரி முதல்வர் பி. கிரிராஜ் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.பி.எஸ்.ஜி நிறுவனங்கள் இயக்குனர் (தேர்வுகள்) ஜி. சந்திரமோகன் சிறந்த ப்ராஜெக்ட்களுக்கு பரிசுகள் வழங்கினார்.மேலும் நிகழ்ச்சியில் துறை தலைவர்கள்,ஆசிரியர்கள், தொழில்துறை நிபுணர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
படம்: கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில், , ஸ்டூடண்ட் ப்ராஜெக்ட் எக்ஸ்போ எனும் தலைப்பில் கண்காட்சி இன்று காலை நடைபெற்றது.பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பி. கிரிராஜ் நேரில் பார்வையிட்டார்.