September 21, 2024
தண்டோரா குழு
பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் முதியோருக்கான ஞாபகம் வருதே (மெமரி மற்றும் டிமென்ஷியா கிளினிக்) துவங்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை பேச்சாளர் புலவர் சண்முகவடிவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்,பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன், புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர் பாலாஜி, டிமென்ஷியா இந்தியா அலையன்ஸ் தன்னார்வ அமைப்பின் தலைவர் ஷ்யாம் விஸ்வநாதன், பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் முதியோர் நலமருத்துவர் மோகனவேல் உட்பட முதியோர்கள், கல்லூரி மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.