April 30, 2022 தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரிக்ஸ் 2022 எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் பி.எஸ்.ஜி மருத்துவமனை முதல்வர் சுபாராவ் வரவேற்றார். பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் ஜே.எஸ்.புவனேஸ்வரன், ஜி.கே.என்.எம் மருத்துவமனை முன்னாள் இருதய நலத்துறை தலைவர் முரளிதரன், பி.எஸ். ஜி ஆராய்ச்சி மைய இயக்குநர் சுதா ராமலிங்கம், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் வரதராஜன் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து பி.எஸ். ஜி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ஐ ஆப்டிமா எனும் இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கருவியினை,பி. எஸ்.ஜி அறக்கட்டளை தலைவர் ஜி.ஆர் கார்த்திகேயன் அறிமுகப்படுத்தி வைத்தார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பி.எஸ்.ஜி மருத்துவமனையின்
தலைமை இருதய அறுவை நிபுணரும், துறைத் தலைவருமான பி. ஆர் முருகேசன் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.
கருத்தரங்கில் இருதய அறுவை சிகிச்சை, ரத்தநாள அறுவை சிகிச்சையில் உள்ள அண்மைகால முன்னேற்றங்கள் குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.இயந்திரம் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை முறை மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்யும் முறைகள் குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து கருத்தரங்கில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.