• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.வி.ஆர் திரையரங்குடன் கோவையில் அல்வியல் ஃபன் சவ்வி மால் துவக்கம் !

October 1, 2024 தண்டோரா குழு

ஒரு முன்னணி பொழுது போக்கு மற்றும் சமுதாயத்தினருக்கான ஒரு இடமாக அனைத்து வயதினருக்கும் ஏற்ற புத்தம் புதிய அல்வியல் பன் சவ்வி மால் கோவை மருதமலை ரோட்டில் சீரநாயக்கன்பாளையம், பி. என். புதூரில் துவக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர், நண்பர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்கும் ஏற்ற ஒற்றை நிறுத்த இடம்.விளையாட்டு, உணவு, சினிமா,உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாகவும்,அனைத்து வயதினருக்கும் ஏற்ற மறக்க முடியாத அனுபவங்களை தருவாக இந்த மால் துவங்கப்பட்டுள்ளது.

அல்வியல் ஃபன் மாலில் பல்வேறு வகையான ஒவ்வொருவருக்கும் ஒன்று என விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன.நாடு முழுவதும் 144 திரைகளை கொண்டுள்ள அதிநவீன வசதி கொண்ட பிவிஆர் ஐனாக்ஸ்,தமிழ்நாட்டில் 24வது திரைப்பட அரங்காகவும், கோவையில் 20 திரைகளையும் 3 இடங்களையும் கொண்டுள்ளது. தென்னிந்திய அளவில் தடம் பதித்துள்ள இந்த நிறுவனம்,விரிவாக்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அல்வியல் ஃபன் சவ்வி மாலில் 5 அரங்குகளில் 894 இருக்கைகளை கொண்டுள்ளது. புதிய அதிநவீன தொழில்நுட்பத்தால் திரைப்பட ரசிகர்களை கவர்ந்துள்ளது. படம் பார்க்க சொகுசான அனுபவம், அருமையான நவீன வடிவமைப்பு, அதிநவீன திரைப்பட தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. வெளி உலகிலிருந்து, பொழுதுபோக்கு உலகிற்கு அழைத்து செல்லும் நுழைவாயிலில் விருந்தினர்களை வரவேற்க விசாலமான வியக்க வைக்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.நெரிசலே இல்லாமல் எளிதாக செல்ல வசதியுள்ளதாகவும், அரங்குகளில் திரைப்பட விபரங்களும் காட்சிப்படுத்தப்படுகிறது.

அல்வியல் மாலில் உள்ள ஐந்து பிவிஆர் – ஐனாக்ஸ் அரங்குகளில் வசதியான நகரும் இருக்கை வசதிகள், கால்களை வசதியாக வைத்துக் கொண்டு, படம் பார்க்கும் அனுபவம் புதுமையாக இருக்கும். சிவப்பு, தங்கநிற மஞ்சள், ஊதா மற்றும் பச்சை வண்ணம் என்ற நான்கு கலவைகளில் புதிய சூழல் உருவாகியுள்ளது. நான்கு அரங்குகளில், 2கே லேசர் குவிக்கு தொழில்நுட்பம், டால்பி 7.1 ஒலி அமைப்பும், மற்றும் ஒரு அரங்கில் டால்பி 7.4 ஒலியும், உச்ச ஸ்ருதியிலான ஒலியும் ஈடுஇணையற்ற ஆழ்ந்த அனுபவத்தை தரும்.

அனைத்து வகையான விளையாட்டுக்களை விரும்புவோர், பாரம்பரிய மற்றும் அதிநவீன விளையாட்டுக்கள் அனைவருக்குமான திறனுக்கு ஏற்ற வகையில் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளது. மெய்நிகர் விளையாட்டுப்பகுதி பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. சாகச விளையாட்டு உலகத்தினருக்கு இது புதிய வகை. பல்வேறு வகையான விளையாட்டு யுக்திகள், குடும்பத்தினருக்கு நட்பானவை. குடும்பத்தினரும், நண்பர்களும் போட்டியோடு விளையாடி, மகிழ்ச்சியாக இருக்க முடியும். குழந்தைகள் அதிகம் விரும்பும் டிராம்போலின், குதித்தும், மடக்கியும், பாதுகாப்பாக விளையாடும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இளம் குழந்தைகளுக்கு மிருதுவான விளையாட்டு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சறுக்கல்கள், பந்து விளையாட்டுக்கள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. 7 வயதாக இருந்தாலும் 70 வயதாக இருந்தாலும் அனைத்து தலைமுறையினருக்கும் ஏற்ற விதவிதமான வசதிகளை கொண்டுள்ளது அல்வியல் மால்.
நாள் முழுவதும் பொழுதுபோக்கு, விளையாட்டு, திரைப்படம் என அனுபவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வயிறார அறுசுவை உணவுக்கு உணவு அரங்குமும் உள்ளது. பன்னாட்டு உணவு வகைகளை விதவிதமாக சமைத்து, உடல் நல உணர்வோடு வழங்குகிறது.

குழந்தைகளுக்கும் பெரியர்களுக்கும் ஏற்ற கையால் செய்யப்படும் பிஸ்ஸா, பர்கர், பிரவுனிஸ் போன்றவைகளை தர புகழ்வாய்ந்த மிரகோ பிஸாரிஸ் உள்ளது. கோவையின் சுவை தர எஸ்விஆர் நளபாகம், பிஸ்ட்ரோ தி வேயின் முகல் உணவுகள், சுவையான ஆசிய உணவுகளும் இடம் பெற்றுள்ளன. முட்டையில் 63 வகை உணவுகளை செய்து அசத்துகின்றனர். மதுரை ஜிகர்தண்டா, மிஸ்டர் எப்.பி பபுள் டீ, பில்டர் காபி, பிரஷ் ஜூஸ், மில்க் ஷேக் என அனைத்து அருசுவை உணவும் கிடைக்கும். சர்வதேச உணவு வகை முதல், உள்ளுர் உணவு வரை அனைத்தையும் சுவைப்பதோடு, நிறைவான திருப்தியையும் இவை தரும்.
அல்வியல் மாலின் சிறப்பம்சங்கள், வாகனங்கள் நிறுத்த விசாலமான இட வசதி. கூட்டமாக இருந்தாலும், எளிதாக சென்று வர நெரிசல் இல்லாத நிறுத்தம்.

இது குறித்து அல்வியல் ஃபன்மால் தலைமை செயல் அதிகாரி வைரவன் கூறுகையில்,

” இந்த மாலில் வழக்கமான நிகழ்வுகளுடன், வார இறுதியில் விளையாட்டு போட்டிகள், நண்பர்களுடனும் உறவினர்களுடனும் விழா கொண்டாடும் வசதி மற்றும் அறநிலை நிகழ்வுகளும் இருக்கும். எல்லோரும் கொண்டாடவும், அறிமுகத்திற்கும்,மறக்க முடியாத நினைவகளுக்கும் ஏற்றதாக இருக்கும்,” என்றார்.

தலைமை இயக்குனர் மேனகா கூறுகையில்,

ஒரு வாடிக்கை மையத்தை உருவாக்குவதற்கும் மேலான ஒன்றை செய்ய விரும்பினோம். சமுதாயத்தினர் கூடி மகிழவும், பொழுது போக்கிற்கும் திரைப்படம் பார்க்கவும், குடும்பத்தினருடன் உணவருந்தி மகிழவும் ஒரு இடத்தை உருவாக்கினோம். விரிவான பார்க்கிங் வசதியுடன், அனைத்து வயதினரும் கூடி மகிழ அல்வியல் ஃபன் சவ்வி மால் ஒரு சிறப்பான இடமாக இருக்கும்,” என்றார்.

மேலும் படிக்க