January 24, 2017
தண்டோரா குழு
இந்திய முன்னாள் கிரிகெட் கேப்டன் எம்.எஸ். தோனி, மற்றும் ரியோ ஒலிம்பிக் பாட்மிட்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பி.வி. சிந்து ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் இந்திய பெண் பி.வி. சிந்து ஆவார். இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்ம விருதைப் பெற போகும் இளம் விளையாட்டு வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்துவின் பயிற்சியாளர் பி. கோபிசந்துக்கும் பத்ம விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அவருக்கு வழங்கப்படும் பத்ம விருதின் வகை குறித்து குறிப்பிடவில்லை.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரில் கோபிசந்த் பாட்மிண்டன் அகாதமியை கோபிசந்த் நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் அவர் அர்ஜுனா விருது, துரோணாசாரியார் விருது மற்றும் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தினத்தன்று பி.வி. சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் இந்திய முன்னால் கேப்டன் தோனி அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதால் அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.