September 2, 2017 தண்டோரா குழு
பீகார் மாநிலத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் நடந்த தேர்வின்போது, மாணவர்கள் முறைகேடுகளை பயன்படுத்தி தேர்வு எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் மகாராஜா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இயற்பியல் பாடம் தேர்வு நடைபெற்றது. அப்போது பி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவர்கள்,புத்தகங்கள், குறிப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்து தேர்வு எழுதுவதும், ஒருவரோடு ஒருவர் விடைகளை கேட்டு எழுதுவதுமான புகைப்படம் வெளியானது. இதையடுத்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.
“இந்த கல்லூரியில் சுமார் 2,3௦௦ பேர் அமர்ந்து தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படிருந்தது. ஆனால், பல்கலைக்கழக ஆசிரியர்கள் 4,400 மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்ததால் இந்த முறைகேடு நடைபெற்றது என்று அதிகாரிகள் கூறினர்.
மேலும் இது சம்பந்தமாக ஆசிரியர்களிடமிருந்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அந்த கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.