November 21, 2022 தண்டோரா குழு
குறு சிறு தொழில்கள் முனைவோர்கள் பயன்படுத்தும் LT.CT (112 kw) -க்கான பீக் அவர் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும்,முன்பு இருந்த நிலைக்கட்டணம் ரூபாய் 35 மட்டும் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உண்ணாவிரதம் மற்றும் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் பல்வேறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பாக கூட்டமைப்பின் நிர்வாகிகள் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீமா அரங்கில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ்,சிவ சண்முக குமார், சுருளிவேல் மற்றும் கூட்டமைப்பினர் பேசினர்.
அப்போது இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள சிறு குறு தொழில் செய்வோர் ஏற்கனவே கடந்த இரண்டரை வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் தமிழக அரசு அறிவித்த,மின் கட்டண உயர்வு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும்,குறிப்பாக சிறு குறு தொழில்கள் முடங்கும் அளவிற்கு பீக் அவர் கட்டணம் நிர்ணயம் தமிழகத்தின் அடையாளமாக உள்ள சிறு குறு தொழில் முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனவே, குறு சிறு தொழில்கள் முனைவோர்கள் பயன்படுத்தும் LT.CT (112 kw) -க்கான பீக் அவர் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும் 2. LT.CT -யின் மின்சாரத்தை பயன்படுத்தும் குறு சிறு தொழில்களை பாதுகாக்க 112 kw வரை முன்பு இருந்த நிலைக்கட்டணம் ரூபாய் 35 மட்டும் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ,இரண்டு வகையான பீக் அவர் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி,போசியா கூட்டமைப்பின் 18 தொழில் அமைப்புக்கள் இணைந்து,கோவையில் ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாகவும்,அதே நாளில் தொழில் கூடங்கள் ஒரு நாள் கதவடைப்பு நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.