October 11, 2022
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.27-க்குட்பட்ட பீளமேடு,பாரதி காலனி பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ)விமலா, சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் ஜோதி விநாயகம், நாசர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.