• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புகையிலையின் தீமைகளை விளக்கும் ‘டிஜிட்டல் ஃபிளிப்புக்’ அறிமுகம்

May 31, 2022 தண்டோரா குழு

உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புகையிலையின் தீமைகளை விளக்கும் டிஜிட்டல் ஃபிளிப்புக் அறிமுகம் செய்யப்பட்டது.

புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் இயக்குனர் டாக்டர் குகன் தலைமையில் , புகையிலையின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிஜிட்டல் ஃபிளிப்புக்கை அறிமுகப்படுத்தியது.தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் 15 பக்கங்கள் கொண்ட இந்த ஃபிளிப்புக், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் முன்னிலையில், போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில்குமார் வெளியிட்டார்.

பிளிப்புக்கை அணுக ஒரு லிங்க்(www.nosmokingsrior2022.digione.in) கொடுக்கப்பட்டுள்ளது.

புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீங்கு பற்றி டாக்டர் குகன் கூறியதாவது:-

புகையிலையால் ஏற்படும் தீமைகள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் என்ன என்பது தொடர்பான உரையாடல்கள் மற்றும் அனிமேஷன் வீடியோ விழிப்புணர்வுத் தகவல் இந்த ஃபிளிப்புக்கில் உள்ளது. இந்த ஃபிளிப்புக், ஒரு புத்தகத்தின் பக்கங்களை புரட்டுவது போன்ற உணர்வை கொடுக்கும் படி வடிவமைக்க பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே இது முதல் முயற்சி. சிகரெட்டில் இருந்து வரும் புகையில் குறைந்தது 50 புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் (கார்சினோஜென்கள்) உள்ளன. அவை நுரையீரல் புற்றுநோயை மட்டும் ஏற்படுத்துவதில்லை, ஆனால் அவை தொண்டை, உணவு-குழாய், கல்லீரல், பித்தப்பை, இதயம், கணையம், சிறுநீர் ஆகியவற்றை பாதிக்கின்றன. சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் சில சமயங்களில் இரத்த புற்றுநோய் கூட ஏற்படலாம். புகைபிடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 30-40% அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் டீன் மற்றும் இயக்குநர் டாக்டர்.பி.சுகுமாரன் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர்.ஆர்.கார்த்திகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க