January 6, 2017 தண்டோரா குழு
இந்திய ராணுவ தளபதி பிபின் ரவாத்தின் அதிகாரபூர்வ முதல் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து இந்திய ராணுவ பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் வியாழக்கிழமை (ஜனவரி 5) பேசுகையில்,
“இந்திய ராணுவ தளபதி பிபின் ரவாத் அவர்கள் அதிகாரபூர்வ முதல் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் பயணமாகிறார். இந்த பயணத்தின் போது அவர் உதம்பூர், ஸ்ரீநகர், நக்ரோட்டா மற்றும் சியாச்சின் ஆகிய இடங்களைப் பார்வையிடுவார். அத்துடன் குப்வாரா, அனந்த்நாக், அக்னூர் மற்றும் ரஜௌரி ஆகிய ராணுவ இடங்களைச் சந்திப்பார்.அமைதி, சுமுகநிலையைக் கொண்டுவருவதில் வடக்கு கமாண்ட் ஆற்றிய பங்களிப்பை அவர் பாராட்டினார்.
அத்தலங்களில் உள்ள ராணுவ அதிகாரிகள் அங்கு நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து அவருக்கு விளக்குவார்கள். இந்திய ராணுவத் தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்ற பிபின் ரவாத் முதலில் சந்திக்கும் ராணுவத் தளம் வடக்கு ராணுவ கட்டுப்பட்டு தளம் ஆகும்” என்றார்.
பிபின் ரவாத் கூறுகையில், “தேசத்தின் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு ராணுவப் படைவீரரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுடைய பங்கினாலும், அர்ப்பணிப்பினாலும் ராணுவம் திறமையாகவும் வலுவாகவும் செயல்படுகிறது” என்றார்.
எதிரிகளின் சாதுர்யமான வியூகத்தை முறியடிக்கவும், போரை எதிர்கொள்ளவும் வலுவான உத்தியை நாம் உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.