April 16, 2016 தண்டோரா குழு
பூமியைத் தவிர்த்து வேறு கிரகத்தில் மனிதர்கள் வாழ ஏதேனும் சாத்தியம் உள்ளதா? என்பதைக் கண்டறிய பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர்களது வரிசையில் இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஷும் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவரது விண்வெளி ஆராய்ச்சிக்காக நிதியுதவி அளிக்க பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகும்பேர் முடிவு செய்துள்ளார்.
சூரியக் குடும்பம் போலவே, பல்வேறு நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட கோள்களின் குடும்பங்கள் விண்வெளியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்த ஆராய்ச்சியில் தான் முழுவீச்சில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ்.
நமது சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ள மற்றொரு நட்சத்திரக் குடும்பம் தான்“ ஆல்பா செண்டாரி இங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்பதை ஆய்வு செய்வதற்காக தான் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் உடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகும்பேர் மற்றும் ரஷ்யாவின் மிகப்பெரும் செல்வந்தரான யூரி மில்னர் ஆகியோர் ஒன்றிணைந்து உள்ளனர்.
பொதுவாக தற்போது உள்ள நவீன உலகின் படைப்புகள் மூலம் நாம் அந்த நட்சத்திர குடும்பத்திற்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 30 வருடங்கள் ஆகும். அந்த நட்சத்திரம் 25 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
ஆனால், இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஒலியின் வேகத்தை விட 20 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய நானோ கிராப்ட் எனப்படும் விண்வெளி வாகனத்தைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
அதன் மூலம் நாம் அந்த நட்சத்திரத்தை 20 வருடத்தில் சென்று விடலாம் என்பது தான் அவரது ஆராய்ச்சி.
அவரது, இந்த ஆய்வுக்காக, ரஷ்யாவின் மிகப்பெரும் செல்வந்தரான யூரி மில்னர் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகும்பேர் ஆகியோர் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளனர். ஆராய்ச்சி வெற்றி பெறும் பட்சத்தில் ஆல்பா செண்டாரிக்கு ஒரு விண்கலம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.