September 26, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் வேடப்பட்டி புதுக்குளம், மற்றும் செம்மேடு உக்குளம் தூர்வாரப்பட்டு முழு கொள்ளளவு எட்டியுள்ளதையடுத்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விவசாய பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதன் பின்னர் அவர் கூறியதாவது,
”பெருகி வரும் தண்ணீர் தேவையை சமாளிக்க மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்து, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளான அணைகள், வாய்க்கால்கள், மற்றும் ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி நீர் கொள்ளவை மீட்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, விவசாயிகள் தங்களின் நஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டரும், புஞ்சை நிலங்கள் ஒரு ஏக்கருக்கு 80 கனமீட்டரும் நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செம்மேடு உக்குளம் மற்றும் வேடபட்டி புதுக்குளம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு குளங்கள் தூர்வாரி வண்டல் மண் வழங்கும் பணியானது கடந்த மார்ச் மாதத்தில் துவங்கியது.
செம்மேடு உக்குளம் தூர்வாரும் பணியானது அரசு, பொதுமக்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது. 76 ஏக்கர் கொள்ளவு கொண்ட இக்குளத்திலிருந்து 1.50 மில்லியன் கன அடி (20000லோடு டிப்பர் லாரி) மண் எடுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 1000 விவசாயிகள் தங்களது 3000 ஏக்கர் நிலத்திற்கு வண்டல் மண் எடுத்து பயனடைந்தனர்.
மேலும், நீர்தேக்கத்திற்கு 1.6மீட்டர் அளவிற்கு இக்குளம் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பு இருந்த 660 மில்லியன்லிட்டர் கொள்ளளவுடன் கூடுதலாக சுமார் 450 மில