• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதுப் பொலிவு பெரும் 153 ஆண்டுக்கால பழமையான ரயில் நிலையம்.

April 2, 2016 வெங்கி சதீஷ்

153 வருடங்கள் பழமையான பெரியநாயக்கன் பாளையம் ரயில்நிலையத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்ரான்சு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

இதற்கான கல்வெட்டை சுப்ரான்சு அவர்கள் கோயம்புத்தூர் லட்சுமி மெஷின் வர்க்ஸ் நிறுவன இயக்குநர், ஆர் ராஜேந்திரன், சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் ஆர் எஸ் சின்ஹா, சேலம் கோட்டப் பொறியாளர் நந்தகோபால், மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

வடகோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ரயில் தடத்தில் உள்ள பெரியநாயக்கன் பாளையம் ரயில்நிலையம், இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்று. 1873ம் ஆண்டு நிறுவப்பட்டது.

பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு இந்த ரயில் நிலையத்தை 75 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்துக் கட்ட கோயம்புத்தூர் லட்சுமி மெஷின் வர்க்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இப்பணிகளைத் துவக்கி வைக்கும் முகமாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அதற்கான கல்வெட்டை இன்று திறந்து வைத்தார்.

நிகழ்வில் பேசுகையில், சுப்ரான்சு அவர்கள், கட்ட்டப்பணிகள் 8 மாத காலத்தில் முடிக்கப்படும் என்றும், இப்பணிகளை மேற்கொள்ளச் செலவுகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தமைக்கு கோயம்புத்தூர் லட்சுமி மெஷின் வர்க்ஸ் நிறுவன நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

அருகிலுள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக் கழகத்தில் பயில்வோர், மற்றும் லட்சுமி மெஷின் வர்க்ஸ் நிறுவன ஊழியர்கள் மட்டுமன்றி இப்பகுதி பொதுமக்களின் பயணத்தை இனிமையாக்க இம் மேம்பாட்டுப் பணிகள் உதவும் என்று தெரிவித்த அவர், இப்பகுதியின் தொழில் மேம்பாட்டுக்கும் அது உதவும் என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது, வடகோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ரயில் தடத்தினை இரட்டிப்பாக்கும் திட்டம் ஏதும் தற்போது இல்லை என்றும், தற்போதுள்ள ரயில்சேவைகள் பயணிகளின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்த அவர்,

நீலகிரி மலை ரயில் பகுதியில் பாதுகாப்பு கருதி சிறப்பு ரயில்கள் இயக்க இயலாது என்றும், அதற்குப் பதிலாக தற்போதுள்ள ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி சோதனை அடிப்படையில் இணைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் துடியலூர் ரயில் நிலைய கட்டிடம் கட்ட கோயம்புத்தூர் மாநகராட்சி அதற்கான தொகையை செலுத்தி உள்ளதாகவும், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு 2 வாரங்களுக்குள் பணிகள் துவங்கும் என்றும் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதி ரயில்பயணிகள் நல அமைப்பின் உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பயணிகள் வசதி மேம்பாட்டிற்கு சேலம் கோட்டம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விழாவில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் கேபி தாமோதரன், முதுநிலைய இயக்க மேலாளர் ஈ ஹரிகிருஷ்ணன், முதுநிலை மின்பொறியாளர் எஸ் ரெங்கராஜன் மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க