• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“புத்தகச் சிறையில்” சிக்கிய நபர்!

February 25, 2017 தண்டோரா குழு

புத்தகம் படிப்பது என்றால் சிலருக்கு ரொம்ப பிடிக்கும். சிலர் புத்தகம் படிப்பதில் மூழ்கிவிட்டால், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கூட மறந்துவிடுவர். சிலருக்கு விடுமுறை நாட்களில் புத்தங்களை வாங்கி வந்து படிக்கும் பழக்கம் உண்டு.

இவ்வாறு புத்தக உலகில் இருப்பவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே பிரச்சினையில் சிக்குவதும் உண்டு. அதற்கு ஒரு சுவையான அனுபவம் பிரிட்டன் கேம்பிரிட்ஜில் நடந்திருக்கிறது.

கேம்பிரிட்ஜைச் சேர்ந்த ஆலிவர் சொச்கிக் என்ற 69 வயது நபர் ஒரு புத்தகப் பிரியர். அவர் ஒரு ஓவியராகப் பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆக இருக்கிறார்.

அவர் வாட்டர்ஸ்டோன் என்னும் புத்தகக் கடைக்குச் சென்று, எந்தப் புத்தகங்களை வாங்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தார். மேலே இருந்த புத்தகப் பிரிவுகளில் இருந்த அவர் அங்கு இருந்த சில புத்தகங்களை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தார். அதனால் அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. கடை மாலை 7 மணிக்கு மூடப்படும் என்பதைக்கூட அவர் மறந்து விட்டார்.

சிறிது நேரம் கழித்து, கடை அமைதியாக இருப்பதை உணர்ந்தார். கீழே இறங்கி வந்து பார்த்தபோது, கடையில் யாரும் இல்லை. அப்போதுதான் கடை உரிமையாளர் தன்னை உள்ளே விட்டுவிட்டு, கவனிக்காமல் கடையை மூடிவிட்டார் என்று புரிந்து கொண்டார்.

இந்த அனுபவம் அவருக்கு முதல்முறை அல்ல. இதற்கு முன் அங்கு இருந்த பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் மாட்டிக்கொண்டார்.

“நான் மேலே ஒரு புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். கடை முழுவதும் அமைதியாக இருந்தது. இருந்தாலும் எனக்குச் சந்தேகம் தோன்றவில்லை. நான் கீழே இறங்கி வந்து பார்த்தபோது, கடையில் யாருமே இல்லை. பிறகுதான் நான் கடைக்குள் சிக்கிக்கொண்டேன் என்று புரிந்தது.

புத்தகக் கடை அமைந்துள்ள பகுதியில் வெளியே உள்ள மக்களின் கவனத்தைக் கவர்வதற்காக கடையில் விளக்குகளை அணைத்து எரியவிட்டுள்ளார். கடையில் உள்ள அவசர ஒலியை அழுத்தியுள்ளார். ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை.

சுமார் 1 மணி 2௦ நிமிட நேரம் கடைக்குள் சிக்கியிருப்பதை மதிப்பிட்டார். இதற்கு முன் பல்கலைக்கழக நூலகத்தில் சிக்கியிருந்த அனுபவம் காரணமாக அவர் பதற்றப்படவில்லை. அமைதியாக இருந்துள்ளார்.

“நான் சிக்கிக்கொண்டுள்ள இந்தக் குழப்பத்திலிருந்து எப்படி விடுதலை அடைகிறது என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். கடையில் கண்ணாடி வழியாகப் பார்த்தபோது மக்கள் மேலும் கீழுமாக நடந்துகொண்டிருந்தனர். ஒரு போலீசார் அந்த பக்கம் வரமாட்டாரா? உதவி செய்ய யாராவது வரமாட்டார்களா? என்று நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றார்.

ஆலிவரின் மனைவியுடன் தொடர்பு கொள்ள முடியாததால் அவருடைய மகளை அழைத்தார். காவல்துறையின் 101 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கூறினாள். அவளுடைய ஆலோசனையைப் பின்பற்றி காவல் துறையினரைத் தொடர்புகொண்டு, தன்னுடைய நிலையைத் தெரிவித்தார்.

அந்தக் கடையின் உரிமையாளரின் சரியான தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்க முடியாமல் சில நேரம் காவல் துறையினர் போராடினர். ஆலிவருக்கும் கடையில் இருந்த தொலைபேசியில் இருந்த எண்ணை அறிந்து இயக்க முடியவில்லை.

கடையில் சிக்கியிருந்த ஆலிவரை அந்தக் கடை உரிமையாளர் சில நேரம் கழித்து வெளியே செல்ல உதவியுள்ளார்.

“வாட்டர் ஸ்டோன் புத்தகக் கடையில் சிக்கியதை விட மற்ற எத்தனையோ பாதுகாப்பற்ற இடங்கள் உள்ளன. அந்தக் கடையில் இருந்த தத்துவப் பிரிவு, கலைப் பிரிவு ஆகியவற்றில் இருந்த புத்தகங்கள் என்னை அதிகமாகக் கவர்ந்தன” என்றார் ஆலிவர்.

மேலும் படிக்க