May 29, 2017 தண்டோரா குழு
“புனித ரமலான் நோன்பு” இம்மாதம் 27-ம் தேதி முதல் தொடங்கியது. வரும் ஜூன் மாதம் 26-ம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாப்படவுள்ளது. பண்டிகைக்காக நோன்பு தொடங்கிய முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“மன் கி பாத்” என்னும் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,
“இந்திய மக்களுக்கும், உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும், புனித ரமலான் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெபம், ஆன்மீகம் மற்றும் தொண்டு ஆகியவைதான் இந்த ரமலான் மாதத்தின் முக்கிய நோக்கம் ஆகும். நமது முன்னோர்கள் ஏற்படுத்திய பாரம்பரியத்தின் காரணமாக, பல சமூகம் மற்றும் மதத்தை சேர்ந்த சுமார் 1.25 பில்லியன் மக்கள் இன்று நம்மோடு வாழ்ந்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
“இந்த புனித மாதம், உலகெங்கும் வசிக்கும் மக்களை அமைதியாலும், ஒற்றுமையாலும், இணக்கதாலும் ஒன்று சேர்க்கட்டும்” என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவிலும் தெரிவித்துள்ளார்.