July 15, 2017
தண்டோரா குழு
இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேயின் வான் அறிவியாளர்கள், பூமியில் இருந்து 4 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு ‘சரஸ்வதி’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த சரஸ்வதி நட்சத்திர கூட்டத்தின் எடை சூரியனை விட அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது 1௦ கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நமது பால்வெளி மண்டலத்தை உள்ளடக்கும் விண்மீன் கூட்டம் தான் Local Galaxy ஆகும். இது சுமார் 54க்கும் மேற்பட்ட விண்மீன்களை கொண்டது. சுமார் 5௦௦ கோடி ஒளி ஆண்டுகளை கொண்ட Laniakea Supercluster என்னும் நட்சத்திர கூடத்தின் ஒரு பகுதி ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.