• Download mobile app
02 Jul 2024, TuesdayEdition - 3065
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புரோஜோன் மால் சார்பாக கோ க்ரீன் மாரத்தான் போட்டி – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

June 30, 2024 தண்டோரா குழு

இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் மால் சார்பாக கோ க்ரீன் மாரத்தான் போட்டி நடைபெற்றது.இதனை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

10கிலோ மீட்டர்,5 கிலோ மீட்டர்,1 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் ,பெண்கள்,குழந்தைகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.முன்னதாக போட்டியை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓடினார். இதில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பிரிவு வாரியாக ரூபாய் இரண்டு இலட்சம் ரொக்க பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க