February 26, 2023
தண்டோரா குழு
கோவை சக்தி மெயின் ரோட்டில் சரவணம்பட்டியில் அமைந்துள்ளது புரோஜோன் மால்.இந்த மாலில் நேற்று ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா ஆக்டிவா எச் ஸ்மார்ட் இருசக்கர வாகனம் அறிமுக விழா நடைபெற்றது.
ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய வகை வாகனத்தில் பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.7 வண்ணங்களில் இந்த வாகனங்கள் கிடைக்கின்றது. இதில் ஸ்மார்ட் கீ என்ற புதிய வசதியும் அலாய் வீல் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
இவ்விழாவில் சுமார் 100 வாடிக்கையாளர்களுக்கு புதிய ஹோண்டா ஆக்டிவா எச் ஸ்மார்ட் வாகனம் விநியோகிக்கப்பட்டது.இந்த விழாவில் ஹோண்டா நிறுவனத்தின் டீலர்கள் மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் மண்டல விற்பனை மேலாளர் அன்பரசன் மற்றும் மண்டல மேலாளர் சர்வீஸ் மகேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.