May 25, 2017 தண்டோரா குழு
புறாக்கள் மூலம் போதை மாத்திரைகள் கடத்தல், குவைத் நாட்டு சுங்க துறை அதிகாரிகள் கண்டுபிடிப்பு. கடத்தலுக்கு பயன்படுத்திய புறா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவைத் நாட்டில் போதை மாத்திரைகள் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குவைத்திக்கு அருகில் உள்ள ஈராக் நாட்டிலிருந்து போதை மாத்திரைகள் புறாக்கள் மூலம் கடத்தப்பட்டு இங்கு கொண்டுவரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வெளியான.
இதன் அடிப்படையில் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் குவைத் நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லை பகுதி அருகில் உள்ள ஒரு கட்டத்தின் மேலே புறா ஒன்று நின்றுகொண்டு சத்தம் எழுப்பியதை கண்டனர். அதன் பின் அந்த புறாவை பிடித்து பார்கையில் அதன் முதுகு பகுதியில் போதை மாத்திரைகள் வைத்து அனுப்பியது கண்டுபிடிக்கபட்டன.
இது குறித்து குவைத் சுங்க துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்
” அந்த புறாவின் முதுகிலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈராக் நாட்டிலிருந்து இந்த புறா வந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது,” என்றனர்.