February 4, 2023 தண்டோரா குழு
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புற்று நோய் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இது குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.தற்போது ஒரு ஆண்டுக்கு புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் 14.62 லட்சம் பேராக உள்ளனர்.மேலும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.புற்றுநோயால் ஏற்படும் பாதிப்பை, உயிரிழப்பை குறைத்திட மக்களுக்கு புற்றுநோய்களின் காரணத்தை பற்றி எடுத்து சொல்லி விழிப்புணர்வு அதிகரிக்க செய்வது ஒன்றே சிறந்த வழி என்றார்.
மேலும், துரையீரல் புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோய் தான் இந்தியாவில் 60% ஏற்படும் புற்றுநோய்களாக உள்ளது. இவை ஏற்பட காரணம் மதுவும் புகையிலையும் அதிக அளவில் பயன்படுத்துவதே.அதே போல நகர பெண்களிடம் அதிகம் ஏற்படுவது மார்பக புற்றுநோய், கிராம் புற பெண்களிடம் அதிகம் ஏற்படுவது கர்பப்பை வாய் புற்றுநோய், முதல் கட்ட நிலையில் இந்த புற்றுநோய்களை கண்டுபிடித்து விட்டால்’ குணப்படுத்திவிடலாம். ஆனால் நம் நாட்டில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் நோயின்3 மற்றும் 4 கட்ட நிலையில் தான் வருகிறார்கள்.
இது சிகிச்சையின் பலனை அவர்கள் முழுதாக பெற தடையாக உள்ளது.
விழிப்புணர்வு இருந்தாலே நாம் இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளையும் மரணங்களையும் பெருமளவு குறைத்திட முடியும் எனவே இந்த நோக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் தொடர்ந்து முயற்சிகளை எடுக்கும் என்றார்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு ஆண்டும் இந்த மையம் தனித்துவமான முறையில் ஏற்படுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு புற்றுநோய்கள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனிமேட்டட் வீடியோ வடிவில் மருத்துவரும் நோயாளியும் உரையாடுவது போன்ற தகவல் அடங்கிய இணையதளத்தை அணுகும் QR குறியீடு இன்று வெளியிடபட்டது.
இதை எஸ்.என்.அர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் R.சுந்தர் முன்னிலையில் கோவை மாநகராட்சி ஆணையர் M.பிரதாப் வெளியிட்டார்.
இந்த தளத்தை “www.digione.in/srior/CancerDay/indec.html” என்ற லிங்க் மூலமும் அணுகலாம்.இந்த தளத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக கூடுதலாக 12க்கும் அதிகமான புற்றுநோய் குறித்து தமிழ்/ஆங்கிலத்தில் தகவல்கள் உள்ளது. மேலும், 2023 புற்று நோய் தினத்தை முன்னிட்டு, ஆண்களுக்கு ஏற்படும் புராஸ்டேட் புற்றுநோய்க்கான இலவச பரிசோதனை பிப்ரவரி மாதம் முழுவதும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் K.கார்த்திகேஷ் நன்றியுரை
ஆற்றினார்.