March 9, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பணி சூழல் குறித்து தொழில்துறை உடன் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு டி ஜி பி சைலேந்திரபாபு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
கோவை சரகத்தில் தொழில் முனைவோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வீடியோ பதிவு பீதி தொடர்பாக காவல்துறை,தொழில் துறை சிறப்பாக கையாண்டு சுமுகமாக்கியுள்ள நிலையில்
வதந்தி குறைந்துள்ளதாகவும் கூறினார். தொழிலாளர்களுடன் தொடர்ந்து உறையாட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,
காவல்துறை பேட்ரோல் அதிக அளவில் தொழிலாளர்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும்.
சி சி டி வி கேமரா கண்காணிப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் தமிழகத்திற்கே தொடர்பில்லாத வீடியோக்கள் பரப்பி விடப்படுவதாகவும் இது தொடர்பாக
புலண்விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வீடியோ ஏன் வதந்தியாக பரப்பப்படுகிறது என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதில் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
ஹோலிப் பண்டிக்கைக்காக தொழிலாளர் சென்றுள்ளனர் என்றும்ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படு வருவதாக கூறிய அவர் பிரச்சனைகளை எளிதில் கையாள ஐ பி எஸ் அதிகாரிகள் கமிட்டி மூலமாக பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் கள நிலவரத்திற்கு ஏற்றவாறு காவல்துறை கையாழ்கிறது என்றும் குற்றத்திற்காக வலைத்தளங்கள் பயன்படுத்தினால் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும்அடையாளம் தெரியாத நபர்கள் மொபைலில் லிங்க் அனுப்பினால் எதிர்வினை ஆற்ற வேண்டாம் எனவும் காவல்துறைக்கு அழைக்க வேண்டும் எனவும் கூறினார்.