December 19, 2022
தண்டோரா குழு
கோவையில் புலியகுளம் மாரியம்மன் சாரிட்டபிள் டிரஸ்ட் துவக்க விழா நடைபெற்றது விழாவில் இலவச சொர்க்கரதம் மற்றும் பிரீசர் பாக்ஸ் சேவை துவங்கப்பட்டது.
கோவை புலியகுளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதியும், பல்வேறு சமுதாய பணிகளை முன்னெடுக்கும் விதமாக புலியகுளம் மாரியம்மன் சேரிட்டபிள் டிரஸ்ட் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா புலிய குளம் அந்தோணியார் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னால் அறங்காவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இதில், அறக்கட்டளையின் தலைவர் விமல் அனைவரையும் வரவேற்று பேசினார்..சிறப்பு அழைப்பாளராக தேவேந்திர குல வேளாளர் சமூக தலைவர் வீர சோழிய வம்சம் பி.கே.என். பிரபுகுமார் பட்டக்காரர் கலந்து கொண்டார். விழாவில் மாரியம்மன் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக இலவச சொர்க்க ரதம் மற்றும் ப்ரீஷர் பாக்ஸ் சேவை துவங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் முனியம்மாள், ரவி,மகேந்திரன், ராஜேந்திரன்,கொழுந்து நண்பர்கள்,பாலசுப்ரமணியன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.