March 13, 2017
தண்டோரா குழு
சென்னை புழல் சிறையில் உள்ள வேந்தர் மூவீஸ் எஸ்பி மதனிடமிருந்து 15,000 ரூபாயை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது புகார் எழுந்தது. அதையடுத்து, பல நாட்களாகத் தலைமறைவாக இருந்த மதனை காவல் துறையினர் கடந்த நவம்பர் மாதம் திருப்பூரில் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைந்தனர்.
இந்நிலையில், புழல் சிறையில் உள்ள கைதிகளிடம் அதிக அளவு பணம் புழங்குவதாகச் சிறையின் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சிறையில் உள்ள அறைகளைக் காவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது மதன் அறையில் ரூ. 15 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.