May 5, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் பூங்கா ஒன்றில் உடல் உறவு வைத்து கொண்ட தம்பதியினருக்கு தண்டனையாக அந்த பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும் என நீதிபதி மைகேல் சிச்கோநேட்டி என்பவர் தீர்ப்பளித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவின் ஓஹயோ மாகணத்தில் உள்ள பொது பூங்கா ஒன்றில் ஒரு தம்பதியினர் பொது இடம் என்று கூட பாராமல் உடல் உறவு வைத்து கொண்டனர்.இது தொடர்பாக அந்த தம்பதியினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மைகேல் “பொது பூங்காவில் உறவு வைத்து கொண்ட குற்றத்திற்காக அந்த தம்பதியினர் அந்த பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் பூங்காவை சுத்தம் செய்யும் போது அவர்களோ அல்லது மற்றவர்களோ உபயோகப்படுத்திய ஆணுறைகள் அங்கே இருந்தால் அதனையும் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். உள்ளூர் செயதித்தாள் மூலம் அவர்கள் செய்த தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வித்தியாசமான தீர்ப்பளித்தார்.
அமெரிக்காவின் ஓஹயோ மாகணத்திலுள்ள பைனேச்விள்ளே நகரில் வசித்து வரும் நீதிபதி மைக்கேல் கடந்த 21 ஆண்டுகளாக, இது போன்ற புதுமையான நீதி முறையை பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய முறைகள் மூலம் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
நீதி மைகேல் வித்யாசமான தீர்ப்புக்களை குற்றவாளிகளுக்கு வழங்குவதில் சிறப்பு பெயர் பெற்றவர். அவர் தீர்ப்பு வழங்கிய வேறு சில சுவாரசியமான வழக்குகள்.
அதிக குளிரான நவம்பர் மாத இரவில், ஒரு பெண்மணி 35 பூனைக்குட்டிகளை ஒரு காட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டார். இந்த கொடூரமான செயலுக்காக, பூனைக்குட்டிகளை விட்டு வந்த அதே காட்டில் தண்ணீர், உணவு மற்றும் தங்குவதற்கு டென்ட் இல்லமால் ஒரு நாள் இரவு முழுவதும்இருக்க வேண்டும். குளிர் அதிகமாக இருப்பதால்,நெருப்பு மூட்டி குளிர்காயலாம் என்று தீர்ப்பளித்தார்.
காவல்துறை அதிகாரிகளை ஒருவர் ‘பன்றிகள்’என்றுகூறினார். சுமார் 35௦பவுண்ட் (17௦) கிலோ கொண்ட பன்றி ஒன்றை கையில் ஏந்திக்கொண்டு, ‘இது ஒரு காவல்துறை அதிகாரியில்லை’ என்ற அட்டையை கையில் பிடித்துக்கொண்டு தெருமுனையில் நிற்கவேண்டும் என்று தண்டனை விதித்தார்.
ஒருவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த உடல் அருகிலிருந்த மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்து. இதைதொடர்ந்து விபத்து ஏற்படுத்திய நபருக்கு அவர்களுடைய இறந்த உடலை பார்க்க வேண்டும் என்று தண்டனை கொடுத்தார்.
டாக்ஸியில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் அதற்கான கட்டணத்தை கொடுக்க தவறிவிட்டார். அதற்கு தண்டனையாக, டாக்ஸியில் பயணம் செய்த 3௦மைல் (48 கிலோமீட்டர்) தூரத்தை அவர் நடந்தே செல்ல வேண்டும் என்றார்.
‘சால்வேஷன் ஆர்மி’என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் வீடு இல்லாத மக்களுக்காக பணம் சேர்த்து வைத்திருந்தது. அவர்களிடமிருந்து ஒருவர் பணத்தை திருடிவிட்டார். அவருக்கு ஒருநாள் முழுவதும் தெருவிலேயே தங்க வேண்டும் என்று தண்டனை விதித்தார்.
ஆரம்ப பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ஒரு பள்ளி திட்டமிட்டிருந்தது. ஆனால், பயணத்திற்கு முதல் நாள், அப்பள்ளியின் மேல்நிலை மாணவர்கள் சிலர், பள்ளி வாகனத்தில் டயர்களை சேதப்படுத்தியிருந்தனர். பிடிப்பட்ட மாணவர்கள், ஆரம்ப பள்ளிமாணவர்களை அவர்களே சுற்றுலா அழைத்துச்செல்ல வேண்டும் என தீர்ப்பளித்தார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, இயேசு பிறந்த மாட்டு தொழுவத்தின் நினைவாக ‘குடிலை’ வைப்பது வழக்கம். அதன் மீது 666 என்னும் சாத்தனின் எண்ணை இரண்டு இளம் வயதினர் எழுதியிருந்தனர். ஏசுவின் தாயாகிய மரியாள் தந்தை ஜோசப் ஆகியோர் போல் உடையணிந்து, ஒரு கழுதையை அந்த நகரம் முழுவதையும் அழைத்து செல்லும்படி தண்டனை விதித்தார்.