September 21, 2021 தண்டோரா குழு
கோவை டவுன்ஹால் அருகே பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் தெரிவித்தாவது:
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 20ம் தேதி வரை தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி முடிய பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் தசாவதாரம் செட், விநாயகர் செட், அத்திவரதர், தர்பார் செட், அஷ்டலட்சுமி செட், மும்மூர்த்தி செட், கிரிவலம் செட், கருடா சேவை செட், திருப்பதி செட், குபேரன் செட், வைகுண்டம் செட், மைசூர் தசர செட், எலி நடன செட், வாசு தேவர் செட், கோபியர் செட், வளைகாப்பு செட், தாயம் செட், என பல விதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி மூலம் ரூ.50 லட்சம் வரை விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனைய நிலைய மேலாளர் ரொனல்டு செல்வஸ்டின் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.